ஆர்.கே. நகர்: மதுசூதனன், மருதுகணேஷ், தினகரன், கங்கை அமரன், தீபா உள்பட 82 வேட்புமனுக்கள் ஏற்பு

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மதுசூதனன், மருதுகணேஷ், கங்கை அமரன், டிடிவி தினகரன் உள்பட 82 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.


சென்னை: ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் தலைமையில் நடைபெற்றது. சசிகலா அணி வேட்பாளர் டிடிவி தினகரன் வேட்புமனுவை ஏற்கக் கூடாது என்று எதிர்ப்பு கிளம்பிய நிலையில் பல மணி நேர தாமதத்திற்குப் பிறகு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சி வேட்பாளர் மதுசூதனன், திமுக வேட்பாளர் மருதுகணேஷ், தேமுதிக வேட்பாளர் மதிவாணன், பாஜக வேட்பாளர் கங்கை அமரன், தீபா உள்ளிட்ட 82 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 45 வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால், அவரது ஆர்.கே.நகர் தொகுதியில், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில், திமுக, அதிமுக சசிகலா அணி, அதிமுக ஓபிஎஸ் அணி, தீபா பேரவை, பாஜக, தேமுதிக, நாம்தமிழர் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியோர் களமிறங்கியுள்ளனர்.
இடைத்தேர்தல் களத்தில் பலமுனை போட்டி நிலவும் நிலையில் சுயேட்சைகளும் மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. தேர்தலில் போட்டியிட 127 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.
127 பேர் வேட்புமனு தாக்கல்

 127 பேர் வேட்புமனு தாக்கல் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட மார்ச் 16 முதல் 23 வரை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 127 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர், வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் தலைமையில் தொடங்கியது. இதில் முறையாக தாக்கல் செய்யப்படாத, மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும். வேட்புமனுக்களை வாபஸ் பெற 27ஆம் தேதி கடைசி நாளாகும்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 16 வேட்பாளர்களின் பெயர் இடம் பெற முடியும். வேட்பாளர்கள் எண்ணிக்கை, 32 ஆக இருந்தால், இரண்டு ஓட்டுப்பதிவு மிஷின் பயன்படுத்தப்படும்.

ஓட்டுச்சீட்டு முறை

ஓட்டுச்சீட்டு முறை வேட்பாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, மிஷின்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படும். அதிகபட்சம் 4 மிஷின்கள் மட்டுமே பயன்படுத்தமுடியும். 63 வேட்பாளர்களுக்கு மேல் தேர்தலில் போட்டியிட்டால், மிஷின்களுக்கு பதில், பழைய முறையான ஓட்டுச் சீட்டுகளை பயன்படுத்த வேண்டும்.

முக்கிய வேட்பாளர்கள்

முக்கிய வேட்பாளர்கள் ஆர்.கே. நகரில் சசி அணியின் டிடிவி தினகரன், ஒபிஎஸ் அணியின் மதுசூதனன், பாஜகவின் கங்கை அமரன், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தேமுதிகவின் மதிவாணன், நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் லோகநாதன் ஆகியோர் களத்தில் உள்ள முக்கிய வேட்பாளர்கள்.

ஏப்ரல் 12ல் வாக்குப்பதிவு

ஏப்ரல் 12ல் வாக்குப்பதிவு ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஏப்ரல் 15ஆம் தேதி நடைபெறும் அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்

டிடிவி தினகரன் மனு ஏற்பு

டிடிவி தினகரன் மனு ஏற்பு சசிகலா அணி சார்பில் போட்டியிடும் டிடிவி தினகரன் வேட்புமனை ஏற்கக் கூடாது என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் மனு தாக்கல் செய்தார். திமுகவும் டிடிவி தினகரன் மனுவை ஏற்க எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் காலதாமதம் ஏற்பட்டது. பல மணி நேர தாமதத்திற்குப் பிறகு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மதுசூதனன், கங்கை அமரன் வேட்புமனுக்கள் ஏற்பு

மதுசூதனன், கங்கை அமரன் வேட்புமனுக்கள் ஏற்பு அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சி வேட்பாளர் மதுசூதனன் மனு ஏற்கப்பட்டது. திமுக வேட்பாளர் மருதுகணேஷ் வேட்புமனுவும், தேமுதிக வேட்பாளர் மதிவாணன் வேட்புமனுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதே போல பாஜக வேட்பாளர் கங்கை அமரன் மனுவும் ஏற்கப்பட்டுள்ளது.
தீபா உட்பட 82 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு

தீபா உட்பட 82 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை நிறுவனர் தீபா வேட்புமனு உட்பட மொத்தம் 82 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. சரத்குமார் கட்சி வேட்பாளர் அந்தோனி உட்பட 45 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. வேட்புமனுக்களை வாபஸ் பெற 27ஆம் தேதி கடைசி நாளாகும். 28ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.
Source:Oneindia thank you
Share on Google Plus
என்ன நடக்குது இணையதளம் முலம் உண்மையான பத்திரிக்கை செய்தியை அறிந்து கொள்ளுங்கள் .
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment